மஹிந்தானந்தவிடம் விசாரணை ஆரம்பம் » Sri Lanka Muslim

மஹிந்தானந்தவிடம் விசாரணை ஆரம்பம்

Contributors
author image

Editorial Team

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்றை மேற்கொண்ட முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவு வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது.

குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் இல்லத்திற்கு இன்று காலை 6 மணிக்கு சென்று இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியை பணத்திற்காக தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த தினம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka