கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு » Sri Lanka Muslim

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

Contributors
author image

Editorial Team

சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில் மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடுமுழுவதுமுள்ள அதன் கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த சுரக்ஷா மாணவர் காப்பீட்டு திட்டம், இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதோடு, அது தொடர்பான பிரதிபலன்களையும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை (011 2357357) தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது , 011 2319015, 011 2319016, 011 2319017 ஆகிய சுரக்ஷா சேவை தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by Srilanka Muslims Web Team