புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது » Sri Lanka Muslim

புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது

Contributors
author image

Editorial Team

கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை மெனிங் சந்தையின் பின்னால் பெஸ்டியன் மாவத்தை மற்றும் ஓல்கோட் மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரக்கறி லொறிகளில் குறித்த குழுவினர் கப்பம் பெற்றுள்ளனர்.

நேற்று (25) காலை 8.30 மணிக்கு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 36, 38, 55, 60 ஆகிய வயதுடைய கிரேன்பாஸ் வெல்லம்பிட்டி மற்றும் கஹவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை இல-02 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka