பிரதமர் - வடக்கு ஆளுநர் கொழும்பில் சந்திப்பு » Sri Lanka Muslim

பிரதமர் – வடக்கு ஆளுநர் கொழும்பில் சந்திப்பு

IMG_20200629_205152

Contributors
author image

Editorial Team

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும்   வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ்  ஆகியோருக்கிடையில்  சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை  வழமைக்கு கொண்டுவருதல் தொடர்பில் இதன்போது, பேசப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து  கடல் மார்க்கமாக  நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை   தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில்  மக்களின் தேவைகளை  பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய  எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka