கொரோனா வைரஸ் பொருளாதார சரிவு: வேலையிழக்கும் பல்லாயிரம் பேர் - Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் பொருளாதார சரிவு: வேலையிழக்கும் பல்லாயிரம் பேர்

Contributors
author image

BBC

கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கம் காரணமாக உலகெங்கிலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இப்படியான சூழலில் உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் 15 ஆயிரம் பணி வெட்டினை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் மட்டும் 1700 பேர் வேலை வாய்ப்பினை இழப்பார்கள். ஜெர்மன், ஸ்பெயின் மற்றும் பிற பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இழப்பார்கள். ஊழியர் சங்கங்களுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறுகிறது அந்நிறுவனம்.

ஏர் பஸ் நிறுவனத்தின் உலகெங்கிலும் உள்ள அலுவலகத்தில் 134,000 பேர் வேலை செய்கிறார்கள்.

வான் போக்குவரத்தைப் பொறுத்தவரை 2023 வரை இயல்பு நிலை திரும்புவது கடினம் என்று கூறும் அந்நிறுவனம், ஏற்கெனவே உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team