தெஹிவளை சம்பத் வங்கியில் முஸ்லிம் பெண் அவமதிப்பு » Sri Lanka Muslim

தெஹிவளை சம்பத் வங்கியில் முஸ்லிம் பெண் அவமதிப்பு

IMG_20200703_120252

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashrof sihabdeen

தெஹிவளை சம்பத் வங்கிக் கிளையில் நேற்று நடந்த சம்பவம் ஒரு தற்செயல் சம்பவம் என்று என்னால் கருத முடியவில்லை.

தேர்தல் முடியும் வரை இது போல இன்னும் இதே வடிவங்களில் அல்லது வேறு வடிவங்களில் புதிய புதிய வில்லங்கங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

ஒரு பெண்ணை தலை மூடிவந்த ஒரு காரணத்துக்காக இரண்டரை மணி நேரம் காத்திருக்க வைத்தது கல்வித் துறையுடன் சார்ந்த படித்த வங்கியாளர்களும் அதன் நிர்வாகமும் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்குத் திறக்கும் போது நீ தொப்பி போடக் கூடாது, திரு நீறு பூசிp வரக் கூடாது, நீ தலை மூடக் கூடாது என்று வங்கிகள் அறிவுறுத்தல் தருவதில்லை. அப்படி அறிவுறுத்தல் தராத நிலையிலும் அரச பாதுகாப்பு வேண்டுகோள் இல்லாத நிலையிலும் இவ்வாறு வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துவது கேவலமானது.

எல்லாம் முடிந்த பிறகு ஒரு ஏ 4 பக்கத்தில் தவறு என்று சொல்லி விட்டுக் கடந்து போவது வெட்கக் கேடு என்பதை கற்ற வங்கியாளர்கள் புரிந்து கொள்வது நல்லது.

எந்த வங்கியில் இட்டாலும் பணத்தைச் சேமிக்கவும் மீளப் பெறவும் முடியும் என்பதை நாமும் புரிந்து பொருத்தமான ஒன்றைத் தெரிவு செய்வதே புத்திசாலித் தனமாகும்.

Web Design by The Design Lanka