கற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பாடசாலைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் » Sri Lanka Muslim

கற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பாடசாலைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்

educat

Contributors
author image

Editorial Team

தவறவிட்ட கற்றல் நேரத்தை தழுவும் முகமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் சகல பாடசாலைகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சகல ஆசிரியர்களும் மாலை 3.30 மணிவரையில் பாடசாலையில் தங்கிநிற்பது அத்தியாவசியமல்ல. நேர அட்டவணையின் படி குறிப்பிட்ட கற்றல் பாடவேலைகளை பூர்த்திசெய்வது போதுமானதாகும்.

எதிர்வரும் ஜூலை 06 ஆம் திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் பிள்ளைகளுக்காக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் ஏற்கனவே சகல மாகாண மற்றும் வலய அதிகாரிகளைப் போலவே பாடசாலை அதிபர்களும் அறிவூறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு முறைமைகளை துல்லியமாக பின்பற்றி, பாடசாலையில் அதற்கான மருத்துவ அறைகள், கை கழுவும் வசதிகள் உள்ளடங்கிய அடிப்படை வசதிகள் குறித்து முழு கவனம் செலுத்தப்படல் வேண்டும் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

ஒரு குழந்தைக்கு காய்ச்சல், இருமல், சளி அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களும் அறிவூறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், பாடசாலைகள் திறப்பது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலங்களில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தரும்போது தமக்குரிய நேர அட்டவைணப் படி உரிய காலத்திற்குள் கற்பிப்பதற்கு மட்டும் பாடசாலையில் தங்குவது போதுமானது எனவும், அதிபரினால் மேலதிக பண்கள் ஒப்படைக்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, அனைத்து ஆசிரியர்களும் பாடசாலையில் பிற்பகல் 3.30 மணி வரையில் தங்கி நிற்பது அத்தியாவசியமல்ல என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

மேலும் ஆசிரியர்களினால் பாடசாலைக்கு வருகை தருதல் மற்றும் வெளியேறுதல் தொடர்பாக பராமரிக்கப்படும் அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்திற்கமைவாக குறிப்புகளை பதிவு செய்வதுடன், நேர சுசியின் படி அந்தந்த ஆசிரியருக்குரிய பாடவேலைரகளுக்குள் கற்பித்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் பாடசாலையில் இருந்து வெளியேறுவதற்கு சந்தரப்பங்கள் வழங்க வேண்டும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் சவாலினால் நீண்ட நாட்களாக பாடசாலைகளை மூட நேரிடுவதினால் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி பாடசாலையின் தவனைத் தேர்வுகள், விளையாட்டு போட்டிகள் அல்லது பாடங்களுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளை ஒழுங்கமைப்பது தவிர்க்கப்படல் வேண்டும் எனவும், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தேவையான பின்னணியை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Web Design by The Design Lanka