தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை » Sri Lanka Muslim

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விஷேட அறிக்கை

election2

Contributors
author image

Editorial Team

உள்ளூராட்சி சபைகளில் அரச சொத்துக்கள் தேவையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தலைவர்கள் தங்களது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் இடம்பெறும் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தங்களது உத்தியோபூர்வ வாகனங்களை பயன்படுத்தவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தவதாக கணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆலோசனைகள் மீறப்பட்டால் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபை தலைவர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka