ரோகித விலகல் » Sri Lanka Muslim

ரோகித விலகல்

IMG_20200709_103531

Contributors
author image

Editorial Team

தான் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து விலகிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக அவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

தான் விலகிக் கொள்வது தொடர்பான எழுத்து மூலமான கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி குறுகிய அரசியல் பாதையில் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மற்றும் மக்களின் தேவைகளை இனம்காண வேண்டும் எனவும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka