போதைப்பொருளை ஒழித்து மாணவ சமூகத்தை காக்க வேண்டும் » Sri Lanka Muslim

போதைப்பொருளை ஒழித்து மாணவ சமூகத்தை காக்க வேண்டும்

IMG_20200710_135127

Contributors
author image

ஊடகப்பிரிவு

நன்றி – ஜனாதிபதி முகநூல்

போதைப்பொருளை ஒழித்து மாணவ சமூகத்தை காக்க வேண்டும் என்பதுவே கொழும்பு மக்களின் முதன்மை கோரிக்கையாக இருக்கின்றது:

குடிசை வாழ்க்கையினால் அவதியுற்றிருந்த தமக்கு தொடர்மாடி வீடுகளை பெற்றுத் தந்ததுபோல, போதைப்பொருளையும் நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றித் தருமாறு கொழும்பு மக்கள் என்னிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

போதைப்பொருள் பாவனையின் காரணமாக பாடசாலை மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல உயிர்கள் பலியாகின்றன என்றும், இது தாம் முகங்கொடுத்திருக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அதனால் – பலமானதொரு அரசாங்கத்தை அமைத்து இந்த நிலைமையை என்னால் ஒழிக்கக்கூடியதாக இருக்கும் என்று தாம் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும், எமது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக – கொழும்பு மாவட்டத்தில் நான் நேற்று மக்களைச் சந்தித்து உரையாடினேன்.

அப்போதே மக்கள் இந்த விடயங்களை என்னிடம் தெரிவித்தனர்.

கொழும்பில் – மீதமுள்ள குடிசைகளையும் அகற்றி வீடுகளைக் கட்டித் தருமாறு மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

2015ல் இடையில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்காகப் பலமான நாடாளுமன்றத்துடன் அரசாங்கம் ஒன்றைப் பெற்றுத்தருமாறு நான் மக்களிடம் கேட்டுக்கொண்ட போது –

பின்னடைவுக்குட்பட்டுள்ள நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் பயணிக்க செய்து சிறுவர்களுக்குப் பாதுகாப்பான நாடொன்றை கட்டியெழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.

கொலன்னாவ பிரதேசத்தில் நீண்டகாலமாக ஒரு குறையாக காணப்படுகின்ற பிரதேச சுகாதார வைத்திய சேவை நிலையமொன்றை பெற்றுத் தருமாறு அங்கிருந்த மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு நான் சாதகமாகப் பதிலளித்தேன்.

என்னுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொள்ள விரும்பியிருந்த – புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி ஒருத்தியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வாய்ப்பையும் நான் நேற்று பெற்றுக்கொண்டேன்..

அத்தோடு – அந்தச் சிறுமி பூரண சுகமடையவும் நான் பிரார்த்தனை செய்தேன்.

Web Design by The Design Lanka