இனவாதிகளிடமிருந்து கல்முனையை பாதுகாக்க ஹரீஸால் மட்டுமே முடியும்! » Sri Lanka Muslim

இனவாதிகளிடமிருந்து கல்முனையை பாதுகாக்க ஹரீஸால் மட்டுமே முடியும்!

yahiyakan

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இனவாதிகளிடமிருந்து கல்முனையை பாதுகாக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸால் மட்டுமே முடியும் என முகாவின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான் தெரிவித்தார்.

டெலிபோன் சின்னத்தில் – திகாமடுல்ல மாவட்டத்தில் – முகா வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸை ஆதரித்து , கல்முனை கடற்கரை திறந்த வெளியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

கல்முனை- இன்று இனவாதிகளின் கழுகுப் பார்வைக்குள் அகப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து எமது பூர்வீகமான கல்முனையை பாதுகாக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான நபர் ஹரீஸ் தான். ஏனைய கட்சிகளில் , கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கியிருப்போர் வெறும் டம்மிகள். வாயால் வடை சுடுபவர்கள்.

விவேகத்துடன் – வேகமும் இருப்பவரால் மாத்திரமே கல்முனையை பாதுகாக்க முடியும் என்பதில் வேட்பாளர் ஹரீஸ் சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துகள் இல்லை.

மர்ஹூம் அஷ்ரப் காலம் தொட்டு – முகாவின் கோட்டையாக இருந்து வரும் கல்முனையை சிதைக்க எத்தனையோ முயற்சிகள் வெவ்வேறான பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டன. அத்தனையும் இந்த நிமிடம் வரை சுக்குநூறாக்கப்பட்டே வந்துள்ளன.
இந்த அர்ப்பணிப்பை அன்று மர்ஹூம் அஷ்ரப் செய்தார். இன்று , தற்போதைய தலைவர் ஹக்கீமும் ஹரீஸூம் செய்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா – இன்று கல்முனையை மையப்படுத்தி போட்டியிட வேண்டிய தேவை ஏன் அவருக்கு ஏற்பட்டது? வேறு ஒன்றுக்குமல்ல , கல்முனையை சிதைக்கவே இங்கு அவர் வந்துள்ளார். மட்டுமன்றி – எமது மகன் ஹரீஸூக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றார். இந்த நிலைமையை பார்க்கும் போது மிகவும் அச்சமாக உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் எமக்கு பிரதிநிதித்துவமும் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். கட்சி வேறுபாடுகளைத் துறந்து வெற்றி பெறப்போகும் வேட்பாளரான ஹருஸூடன் கைகோர்ப்போம்.

இந்த சமூகப் போராட்டத்தில் சாய்ந்தமருது மக்களும் கைகோர்க்க வேண்டும்.

சாய்ந்தமருதுக்கான நகர சபை என்பது முகாவினாலும் கல்முனை மகன் ஹரீஸினாலும் மாத்திரமே கைகூடும் என்பதை இந்த இடத்தில் பகிரங்கமாகவே கூறிக்கொள்கிறேன் என்றார்.

Web Design by The Design Lanka