குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டிடம்; இடைக்கால அறிக்கை பிரதமரிடம் » Sri Lanka Muslim

குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டிடம்; இடைக்கால அறிக்கை பிரதமரிடம்

IMG_20200724_131544

Contributors
author image

Editorial Team

குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டிடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் (2020.07.22) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அறிக்கையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1) கட்டிடத்தின் முன்பக்கத்தில் கூரையின் ஒரு பகுதிக்கும், ஜன்னல்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என்பதால் அப்பகுதிகளை தொல்பொருள் ரீதியில் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வாய்ப்புள்ளது. முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ள பின்பக்கத்திலுள்ள மரத்தாலான விட்டங்கள் மற்றும் செங்கல்கள் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. அதனால் இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் விரிவாக அறிக்கையிடப்பட்டுள்ளதால் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பழைமைவாய்ந்த பகுதியை மீண்டும் மீட்டெடுப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் பழைமை வாய்ந்த கட்டிடம் விரைந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

2) இக்கட்டிடத்தை தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்துதல்

3) குறித்த இடத்தை விரிவாக்கும் திட்டத்தை திருத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கல்

4) இந்த சேதமாக்கலுக்கு பொறுப்புகூற வேண்டிய நிறுவனம் அல்லது நபர்களினால் பாதுகாப்பிற்கு அவசியமான ஏற்பாடுகளை செய்தல்

பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டதுடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீ.ஜீ.குலதுங்க, குருநாகல் மாவட்ட கூடுதல் செயலாளர் ஜீ.ஏ.கித்சிறி, மத்திய கலாசார நிதியத்தின் பதில் அபிவிருத்தி பணிப்பாளர் வாஸ்து நிபுணர் சுமேதா மாதொட்ட புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் பிரதி பணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் பிரசாத் ரணசிங்க ஆகியோர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பிரதமர் ஊடக பிரிவு

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka