சூரிய ஒளி உடம்பில் படாமலேயே இருந்தால், » Sri Lanka Muslim

சூரிய ஒளி உடம்பில் படாமலேயே இருந்தால்,

sun

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இந்த பூமியே சூரியக் குடும்பத்தின் சிறு துளி தான்!. பூமியே சூரியனால் தான் – சூரியனைச் சுற்றியேதான் இயங்குகிறது!. இங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் சூரியனிடமிருந்து தான் ஆற்றல் கிடைக்கின்றது!. தாவரங்கள் வளரவும், பெருகவும் சூரியனே மூல காரணம்!.

நமக்குத் தேவையான “வைட்டமின் டி” சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது என்று படித்திருக்கிறோம். அந்த வைட்டமின் டி சத்து தான் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் சொல்கிறார்கள்!.

ஆனால் இவ்வளவு வலிமையுள்ள – நன்மை தரக்கூடிய சூரிய ஒளி உடலின் மீது படாமலேயே நம் குழந்தைகள், வீட்டுக்குள்ளேயே மாதக்கணக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்!.

கிராமங்களிலாவது வெளியே செல்லும் சூழல் உண்டு, நகரங்களில் இடநெருக்கடியால் வீட்டுச் சிறை வாசத்தில் தான் அவர்கள் கிடக்கின்றனர்!

இப்படி மாதக் கணக்கில் சூரிய ஒளி உடம்பில் படாமலேயே இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படாதா?. அதற்கு மாற்று வழிதான் என்ன?. குறிப்பிட்ட நேர அளவில் தினமும் அவர்களை வெயிலில் நிற்குமாறு, எந்த மருத்துவர்களும் இதுவரை அறிவுறுத்தியாகவும் தெரியவில்லை!. சூரிய ஒளியே / வெப்பமே ஒரு சிறந்த கிருமி நாசினி என்பது , காலங்காலமாக நம் திடமான நம்பிக்கையாயிற்றே!?.

– வி.என்.சரவணன்.

Web Design by The Design Lanka