தமிழகத்தில் பரவும் அச்சம்: கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகும் மற்றொரு காய்ச்சல் » Sri Lanka Muslim

தமிழகத்தில் பரவும் அச்சம்: கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகும் மற்றொரு காய்ச்சல்

IMG_20200725_100603

Contributors
author image

BBC

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாகத் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கும், டெங்குவுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், அவர்களை அடையாளம் காண இயலாமல் இரண்டு பரிசோதனைகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் அதன் முடிவுகளுக்குக் காத்திருக்கும் நிலை இருக்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்குக் குறைந்தது மூன்று நாட்களாகிறது என்கிறது தினமணி செய்தி.

டெங்கு

இந்தநிலையில், கொசு ஒழிப்பு பணிகளையும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Web Design by The Design Lanka