தோசை கூட சாப்பிட முடியாது » Sri Lanka Muslim

தோசை கூட சாப்பிட முடியாது

ranil

Contributors
author image

Editorial Team

தோட்டப் புறங்களை நகர் புறமாக மாற்றி அமைத்தது எமது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (25) மாலை ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மலையகத்தை தோட்டப் புறங்கள் என கூற முடியாது. அதனை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். மலையக மக்களை பாதுகாத்து கொள்வதும் ஐக்கிய தேசிய கட்சி. மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று வெவ்வேறு இடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் விழ்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா தொற்றை அரசாங்கம் பாதுகாப்பதில்லை. நாள் ஒன்று 5000 ஆம் பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் இன்று இல்லை. சிறந்த பாதுகாப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொண்டால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால் தோசை கூட சாப்பிட முடியாது. எவ்வித இலாபமும் இருக்காது. வாழ்க்கையினை கொண்டுசெல்ல கஷ்டம். கொரோனா தொற்று மலையக பகுதிகளுக்கு பரவினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற பகுதிகளில் தான் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும். Ad

Web Design by The Design Lanka