இணையத்தின் ஊடாக பண மோசடி; ஐவர் கைது! » Sri Lanka Muslim

இணையத்தின் ஊடாக பண மோசடி; ஐவர் கைது!

Contributors
author image

Editorial Team

இணையத்தின் ஊடாக வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் ஊடாக கடன் வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கிருலபன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30, 39, 38 மற்றும் 46 வயதுடைய பிட்டபத்தர, நாரஹேன்பிட்ட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடன் வழங்குவது தொடர்பில் வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு தொலைபேசியூடாக அறிவித்து அவர்களுடைய வங்கி விபரங்களை பெற்று அதனூடாக ஒருவரின் கணக்கில் இருந்து 5 இலட்சம் ரூபா வீதம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பண மோசடி செய்யப்பட்டதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து மடிக்கணிணி ஒன்று, வங்கி அட்டைகள், லெமினேட் இயந்திரம் ஒன்று, போலி ரபர் ஸ்டேம் 02, போலி சாரதி அனுமதி பத்திரங்கள் 61, அதற்காக பயன்படுத்தும் அட்டைகள் 925 மற்றும் சர்வதேச சாரதி அனுமதி பத்திரங்கள் 5 உம் பொலிஸாரினார் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் மற்றும் வேன் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிருலபன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி அததெரண

Web Design by Srilanka Muslims Web Team