வேட்பாளர்களுக்கு ஏழு வருடங்கள் அரசியல் தடை » Sri Lanka Muslim

வேட்பாளர்களுக்கு ஏழு வருடங்கள் அரசியல் தடை

IMG_20200803_140104

Contributors
author image

Editorial Team

எந்தவோர் அரசியல்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வேட்பாளர்கள் நீதிமன்றம் மூலம் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு மேலதிகமாக 7 வருடங்களுக்கு அரசியல்தடை விதிக்க வேண்டும் என்றார்.

தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, பதுளை தேர்தல் அலுவலகத்துக்கு, இன்று  (2)  சென்றபோதே, ஹூல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இந்திக அத்துருசிங்க உள்ளிட்டவர்கள், பதுனை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாலும் இந்தப் பிரதேசத்தில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களைப் பின்பற்றி, தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

Web Design by The Design Lanka