பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கிறார் » Sri Lanka Muslim

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கிறார்

mahinda

Contributors
author image

Editorial Team

ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் நாளை (09) முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவை திட்டமிடப்படவுள்ளததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். AD

Web Design by The Design Lanka