முதல் அமர்வுக்கு அனைவருக்கும் அழைப்பு » Sri Lanka Muslim

முதல் அமர்வுக்கு அனைவருக்கும் அழைப்பு

Contributors

9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள 9 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளுமாறு தெரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் வர்த்தமானியில் பெயர் வௌியிடப்பட்ட 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை நாடாளுமன்ற இணைத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என செயலாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka