இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் » Sri Lanka Muslim

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோமா நிலையில்

Contributors
author image

Editorial Team

கொரோனா தொற்றுக்கு உள்ளான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி; கோமா நிலையிலிப்பதாகவும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் இpல்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 9 ஆம்; திகதி தில்லியில் உள்ள தனது வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது மூளையில் உறைந்த ரத்த கட்டி மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்தது. அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்றும் உறுதி செய்யப்பட்டது. அவர் கோமா நிலைக்கு உள்ளானார்.. டாக்டர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்

இந்த நிலையில், நேற்று டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka