1,428 கிலோகிராம் மஞ்சளுடன் அறுவர் கைது » Sri Lanka Muslim

1,428 கிலோகிராம் மஞ்சளுடன் அறுவர் கைது

Contributors
author image

Editorial Team

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 1,428 கிலோகிராம் மஞ்சளுடன் 6 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு, லொறி, நவீன ரக வான் என்பனவும் இலங்கை கடற்படையின் கற்பிட்டி விஜய கடற்படையினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கற்பிட்டி- கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த, 20,26,32,33,37,43 ஆகிய வயதுடையவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த கடத்தல் வர்த்தகத்தின் பிரதான சந்தேகநபர், பாலகுடா பிரதேசத்தில் உள்ள  ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

Web Design by The Design Lanka