பிரணாப் முகர்ஜி காலமானார் » Sri Lanka Muslim

பிரணாப் முகர்ஜி காலமானார்

Contributors
author image

Editorial Team

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமானார்.

பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது கட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது டில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது.

மூளையில் இரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி டில்லியில் உள்ள இராணுவ மருத்து வமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா்.

அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவில் இருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார்.

முன்னதாக, அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந் தது.

Web Design by The Design Lanka