ஊடகவியலாளருக்கு விளக்கமறியல் » Sri Lanka Muslim

ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்

Contributors
author image

Editorial Team

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில், இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டுள்ள இணைய ஊடகவியலாளரை இந்த மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு- புதுக்கடை இலக்கம் 6 மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (31) இந்த ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டதுடன்,  இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Web Design by The Design Lanka