20ஆம் திருத்தச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி வெளியானது » Sri Lanka Muslim

20ஆம் திருத்தச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வர்த்தமானி வெளியானது

Contributors
author image

Editorial Team

அமைச்சரவை அனுமதி வழங்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு  நீதியமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து,  20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

பின்னர், வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லையெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ள முடியுமென, நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

File image

Web Design by The Design Lanka