பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்க நிலையம் » Sri Lanka Muslim

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்க நிலையம்

Contributors
author image

Editorial Team

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48 யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by The Design Lanka