சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் » Sri Lanka Muslim

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல்

Contributors
author image

Editorial Team

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தினாரால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கைளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அனமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படைப்பில் இது தொடர்பான கலந்துரையாடல் இராணவ தளபதி லுதினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Web Design by The Design Lanka