பிரதமரினதோ எனதோ பரிந்துரை என்று பாடசாலையில் மாணவர்களை இணைக்க விண்ணப்பித்தால் நிராகரிக்கவும்: » Sri Lanka Muslim

பிரதமரினதோ எனதோ பரிந்துரை என்று பாடசாலையில் மாணவர்களை இணைக்க விண்ணப்பித்தால் நிராகரிக்கவும்:

Contributors
author image

ஊடகப்பிரிவு

பிரதமரினதோ எனதோ மற்றும் உயர் அரச அதிகாரிகளினதோ பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களைத் தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எனது, எனது செயலக அதிகாரிகளின், பிரதமர் அவர்களின், பிரதமரின் செயலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும் கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது.

உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை எனது செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

#கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

Web Design by The Design Lanka