சுமந்திரன் அவர்களுக்கு நன்றிகள் » Sri Lanka Muslim

சுமந்திரன் அவர்களுக்கு நன்றிகள்

FB_IMG_1600395920890

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஆதிக்க மனோபாவம் வாய்ந்த அரசு இயந்திரத்தை விமர்சித்து கருத்து சொன்னதற்காக கைது செய்யப்பட்டு 158 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த எழுத்தாளர் ரம்சி அவர்கள் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்காக வாதாடுவதற்கு முன்னணி முஸ்லிம் சட்டத்தரணிகளே தயக்கம் காட்டிய நிலையில் எவ்விதமான கட்டணங்களையும் எதிர்பாராது இலவசமாக அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடி அவரது விடுதலைக்காக அயராது உழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிரேஷ்ட சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அநீதிக்கு எதிராகப் போராடவும் நீதிக்காக எப்பொழுதும் எழுந்து நிற்கவும் எல்லோராலும் முடிவதில்லை.

அதற்கு நேர்மைக்காகப் போராடும் அசாத்திய துணிவுள்ள மனம் வாய்க்க வேண்டும்.

என்றுமில்லாதவாறு இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் இனவாதக் கருத்துக்கள் அதிகார மையத்தில் செல்வாக்குச் செலுத்தி வரும் இந்த இக்கட்டான காலத்தில் கௌரவ சுமந்திரன் போன்றவர்கள் நமக்கு ஆறுதலை தருகிறார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான அத்துமீறல்கள் இடம்பெற்றுவரும் இக்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் சமூக உணர்வுள்ள நேர்மையான தலைவர்களால் வழி நடத்தப்படவேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமானதாக மாறிவிடும் என்பதற்கான அறிகுறிகள் மிகத் தெளிவாகவே தென்படுகிறது.

Riyasz Razeek

Web Design by The Design Lanka