மஹிந்தவின் 20 உம் மர்ஹூம் அஷ்ரபின் பிரார்த்தனையும் » Sri Lanka Muslim

மஹிந்தவின் 20 உம் மர்ஹூம் அஷ்ரபின் பிரார்த்தனையும்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.L Nowsad

SLMC யின் கோட்டையான
கிழக்கில் இருந்து தெரிவான 3 MP களும் ” ஹக்கீம் காங்கிரஸிலிருந்து “பிரியப்போகின்றனர்.
ரணிலின் ஆட்சியில் “ஹக்கீம் காங்கிரஸிலிருந்து” பிரிவது SLMC MP களுக்கு மிகவும் சவாலானதாகவே
இருந்தது.

மஹிந்தவின் ஆட்சி சின்னச்சின்ன வரப்பிரசாதங்களுடன் அந்த 3MP களையும் அரவணைக்கும் என்று நம்பலாம்.

20கு எதிராக ஹக்கீம் வழக்குத்தாக்கல் செய்திருப்பதிலும்,3 MP மஹிந்த அணியில் இணைவதிலும்
முஸ்லிம்களுக்குப் பரவலாக அரசியல் நன்மை இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஹக்கீமையோ அல்லது MP களையோ சரி பிழை காண்பது இங்கு நோக்கமே அல்ல.கிழக்கு மண்ணில் புதிய வெடிப்பு ஏற்படப்போகிறது.வறண்ட மண்ணில் இருந்து புதிய முளைகைள் வராதா என்ற ஏக்கம் இருக்கிறது.

முஸ்லீம் காங்கிரசை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றதில் இன்றையத் தலைவர் ஹக்கீமுக்கா? அல்லது ஆண்டாண்டு காலம் MP பதவிகளை வகித்த கிழக்கின் SLMC MP களுக்கா? அதிக பங்குண்டு என்ற சந்தேகம்
தீரப்போகிறது.

என்னைக்கேட்டால் இரண்டு சாராருக்கும் கணிசமான பங்குண்டு என்றுதான் சொல்லத்தோணுகிறது.
கிழக்கின் SLMC MP களை வளைத்து அப்பாவி முஸ்லீம் வாக்காளர்களை அரசியல் ஏமாளியாக்கி ஏமாற்றினார் ஹக்கீம்.
ஹக்கீமை ஆசுவாசப்படுத்த கிழக்கு முஸ்லிம்களை அரசியல் மௌட்டீகதில் வைத்திருந்தனர் கிழக்கின் MP கள் .

இந்தப் பிரிவு சாத்தியமான கையோடு அந்த 3 MP களிடமிருந்து முஸ்லீம் கூட்டமைப்பு என்றொரு கூச்சல் மீண்டும் கிழக்கில்
ஊசலாடும்.அதுவும் ஒரு பகல் கனவு போல மறைந்து போகும்.

முஸ்லீம் அரசியலை ஆழ்ந்து பார்ப்பவர்களுக்கு இந்தப்பிளவு, கிழக்கு முஸ்லிம்களுக்கு கிடைத்த அரசியல் வரலாற்று வெற்றி என்பது புலப்படும்.கிழக்கு முஸ்லிம்களுக்கு மீண்டும் அரசியல் சுதந்திரம் விடுதலை கிடைக்கப்போகிறது.ஒரு பெருநாளை எதிர்பார்ப்பதுபோல் அந்த நாளை நான் காத்திருக்கிறேன்.

இந்தக்கட்சி முஸ்லிம்களுக்கு நன்மை பயக்காது என்றிருந்தால் இந்தக்கட்சியை (SLMC )அழித்துவிடு இறைவா என்ற மர்ஹூம் அஷ்ரபின் பிரார்த்தனை நிறைவேறப்போகிறது.

வரப்போகின்ற அரசியல் வெற்றிடத்திற்கு கிழக்கு மண் சுதந்திரமான விதைகளை நட்டு வைக்க வேண்டும்.

அன்புடன் ……

Web Design by The Design Lanka