கருணாநிதியும் பத்வாக்களும் » Sri Lanka Muslim

கருணாநிதியும் பத்வாக்களும்

karunanithi-6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ash Sheikh Rishard Najimudeen (Nalimi)


பொதுவாக முஸ்லிமல்லாத ஒரு பிரபலம் மரணித்துவிட்டால் முஸ்லிம் அறிஞர்களாக தம்மை சமூகம் முன்னால் நிலைநிருத்திக் கொண்ட சிலர் “தீர்ப்பு” கூற முண்டியடிப்பதை அவதானிக்கலாம். காபிர், நரகம், வேதனை, நெருப்பு போன்ற சொற்கள் அவர்களது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அடிக்கடி வந்து செல்வதை காணலாம். இதனையே கருணாநிதியின் மரணத்திலும் அவதானிக்க முடிகிறது.

“காபிர்” என்றால் “நிராகரித்தவர்” என்பதாகும். நிராகரிப்பதற்கு குறிப்பிட்ட விடயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் முதல் நிபந்தனை. அது பிழைகளின்றி சமர்ப்பிக்கப்படுவது இரண்டாவது நிபந்தனை. அதன் பின்னர் எவ்வித நியாயங்களுமின்றி மறுப்பது மிகப்பெரும் அநியாயம். இதனையே இஸ்லாமிய தூதிலும் நாம் பிரயோகிக்கிறோம். எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தர் இமாம் ஷல்தூத் கூறும் கருத்தையே நாம் வலியுருத்துகிறோம். இஸ்லாத்தின் தூது முழுமையாக, சரியாக‌ முன்வைக்கப்பட்டு அதனை மனமுரண்டாக மறுப்பவரையே இஸ்லாமிய பரிபாஷையில் “காபிர்” என்போம்.

இது ஒரு விடயம். அடுத்த விடயம் முஸ்லிம்களது முதன்மையான‌ பணி தொடர்பானது. நாம் மனிதர்களுக்கு காபிர், பாசிக், முஜ்ரிம், பாசித், முனாபிக், ழால் என்று பட்டம் கொடுத்து தீர்ப்பு கூற அனுப்பப்படவிலை. தீர்ப்பு கூறுவது முழுமையான நீதிக்கும் பூரண அறிவுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரிய விடயம். அவனது அதிகாரத்தை கையிலெடுக்க நாம் யார்?

எமது அறிவு புறத்தை மாத்திரம் அறிந்தது. அகத்தையும் உள்ள‌த்தையும் அறியாதது என்பதே உண்மை. எமது பணி நாம் அடைந்த பெறுமதி மிக்க இத்துதை அடுத்தவர்களும் அநுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் எத்திவைப்பது ம‌ட்டுமே. இங்கு இன்னொரு கேள்வி தோன்றுகிறது. நாம் இஸ்லாத்தை சரியாக புரிந்து, சரியாக எத்திவைக்கிறோமா? என்ற கேள்வியும் அதற்கான‌ மீள்பரிசீலனையுமே எமது கவனத்தைப் பெற வேண்டும் என்பதுதான் நாம் வலியுருத்தும் விடயம்.

நாம் எத்திவைப்பவர்கள் மட்டுமே. நரகம்- சுவர்க்கத்துக்கு தீர்ப்பு கூறுபவர்களல்லர்.

Web Design by The Design Lanka