மு.கா வின் பிரதித் தலைவராக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் நியமனம். » Sri Lanka Muslim

மு.கா வின் பிரதித் தலைவராக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் நியமனம்.

gafoor

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-aboo Jazi


அண்மையில் கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் 28வது வருடாந்த மகாநாட்டில் அக் கட்சிக்கான பிரதித் தலைவராக மு.கா வின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கபூர் அவர்கள் 1980ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டபோது இக் கட்சியின் அன்றைய ஆரம்ப அமைப்பு ஏற்பாட்டாளர்களுள் கட்சிக்குள் இன்றுவரை இருக்கின்ற ஒரே ஒரு மு.கா.வின் மூத்த முதல் உறுப்பினருமாவார். மறைந்த ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களுடன் இணைந்து இக் கட்சியை தோற்றுவித்த ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவதற்கு கஷ்டமான காலகட்டங்களில் கணிசமான பங்கு வகித்துவந்தவர் என்பதுதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

மேலும் இவர் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசின் ஒழுக்காற்று குழுத் தலைவராகவும், மஜ்லிஸ் சூராவின் உப தலைவராகவும், தேர்தல் குழுவினதும், அத்துடன் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவராகவும், கண்டி மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சிக்கான ஆரம்ப கால ஆலோகசராகவும், அக்காலங்களில் கீழ் மாகாணம் உட்பட வடகிழக்குக்கு வெளியேயும் நடைபெற்ற பல தேர்தல் பிரச்சார குழுக்களின் தவிசாளராகவும், பல்வேறுபட்ட கட்சிக்கான பல பதவிகளையும், பணிகளையும் அவ்வப்போது வகித்துவந்த சட்டத்தரணி கபூர் அவர்கள் ஓர் எழுத்தாளரும், இலக்கியவாதியுமான இவர் அரசியல் விவகாரப் பணிப்பாளராகவும், உச்சபீடத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும் மிக நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதுடன்;, துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் கடமைபுரிந்துள்ளார் என்பதும் இங்கு ஈண்டு குறிப்பிடக்கூடிய இவர் பற்றிய முக்கிய குறிப்புகளாகும்.

பல்வேறு சமூக, சமய, கலை, கலாச்சார, இலக்கிய இயக்கங்களின் நிறைவேற்றுக் குழுக்களின் உறுப்பினராகவும், அரச வங்கிகளின் விசேட சட்ட ஆலோசகராகவும் அத்துடன் உள்நாடு உட்பட பல வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச சட்டம் சமயம் இலக்கிய அரசியல் ஆய்வாளர்களின் மகாநாடுகளிலும் பங்குபற்றி சிறப்பித்துள்ள இவர் அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் கண்டி, கல்முனை, தெஹிவலையும் வசிப்பிடமாகவும் கொண்டவருமாவார்.

Web Design by The Design Lanka