கிண்ணியா நகர சபை; மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டவர்கள் உடன் அகற்றப்படும் » Sri Lanka Muslim

கிண்ணியா நகர சபை; மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டவர்கள் உடன் அகற்றப்படும்

FB_IMG_1533846269555

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா நகர சபை பகுதிகளில் உள்ள அனைத்து தொலைபேசி டவர்களும் மக்களுடைய குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகிறது அவ்வாறு மக்களின் குடியிருப்பு பிரதேசத்தில் காணப்படுமாயின் அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார் .

நேற்று (09) கிண்ணியா நகர சபையில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தில் பொது மகன் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் நகர எல்லைகளில் சில டவர்கள் காணப்படுகிறது மக்களது குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறான டவர்கள் காணப்படுமானால் அதை அகற்றவுள்ளோம்.மக்கள் குடியில்லாத பகுதிகளில் டவர்களை அமைக்க முடியும்.

நகர சபையின் சபை அமர்வுகளின் போதும் ஏகமானதாக இந்தத் தீர்மானம் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.புதியதாக டவர்களை அமைப்பதாயின் நகர சபையின் அனுமதியினை உரிய வலையமைப்பின் நிறுவனம் பெறவேண்டும்.

சட்டத்துக்கு முரணாக செயற்பட முடியாது மக்களுடைய நலன்களுக்காகவே இவ்வாறான முடிவுகளை எடுத்து வருகிறோம் டவர்களில் உள்ள கதிர் வீச்சு தாக்கம் பல பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக மக்கள் சார்பாக பல முறைப்பாடுகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாகவும் இது விடயமாக வினவப்பட்டு வருகிறது அனேகமாக கிண்ணியா டெலிகொம் டவரும் விரைவில் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அனைத்து வகையான வலையமைப்புக்களும் கிண்ணியா பகுயில் மக்களுடைய குடியிருப்புப் பகுதிகளிலேயே காணப்படுகிறது இவ்வாறான டவர்களை உரிய வலையமைப்பின் நிறுவனத்துடன் உத்தியோகபூர்வ அறிவிப்பு மூலமாக அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

Web Design by The Design Lanka