UNP கும் NFGG கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து - Sri Lanka Muslim

UNP கும் NFGG கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Contributors

 

ஊவா மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (22) வெள்ளிக்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. ஐ.த.கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக அவர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் MR.நாஜா முகம்மத் அவர்களும் கைச்சாத்திட்டனர்.

 

இந்நிகழ்வில் ஐ.தே. கட்சி சார்பாக அதன் தலைமைத்துவ சபை தலைவர் கௌ.பா.உ கரு ஜெயசூரிய, தவிசாளர் கௌ.பா.உ. கபீர் ஹாசீம், ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கௌ.பா.உ. திஸ்ஸ அத்தனாயக, தேசிய அமைப்பாளர் தயா கமகே, மேல் மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் MR.நாஜா முஹம்மத் (இஸ்லாஹி), தேசிய அமைபாளர் அஷ்ஷெய்க் MBM.பிதௌஸ் (நளீமி),

 

வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப், (நளீமி) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமத்துவ சபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் SH.பிர்தௌஸ் ஆசிரியர், அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி), மற்றும் ந.தே.முன்னணியின் தலைமத்துவ சபை உறுப்பினர்களான MACM.ஜவாகிர் ஆசிரியர், அஷ்ஷெய்க் ரிஸ்வி (காசிமி), பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

12

 

13

 

14

Web Design by Srilanka Muslims Web Team