இணைந்து செயற்பட அமெரிக்கா ஆவல் - Sri Lanka Muslim
Contributors

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட அமரிக்கா ஆவலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மாரி ஹாப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்

இலங்கை விடயத்தில் அமரிக்கா தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று நீதியமைச்சர் ரவ்ப் ஹக்கீம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அமரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் பிரதிப்பேச்சாளர். இலங்கையுடன் மனித உரிமைகள் விடயத்தில் இணைந்து செயற்பட அமரிக்கா அவலாக உள்ளது என்று குறிப்பிட்டார்

இந்தநிலையில் இலங்கையில் எதாவது முன்னேற்றங்கள் உள்ளனவா என்பது குறித்து கொழும்பில் உள்ள அமரிக்க தூதரகத்தின் தகவலை  அறிந்த பின்னரே அது குறித்து ஆராயலாம்; என்று மாரி ஹாப் தெரிவித்தார்(sooriyan fm)

Web Design by Srilanka Muslims Web Team