Video : போதைப் பொருள் வியாபாரி ஜமாலுக்கு பிரதமர் விருந்தளித்தாரா? ஜாதிக்க ஹெல உறுமய - Sri Lanka Muslim

Video : போதைப் பொருள் வியாபாரி ஜமாலுக்கு பிரதமர் விருந்தளித்தாரா? ஜாதிக்க ஹெல உறுமய

Contributors

ஓமல்பே சோபித்த தேரருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்கு மன்னிப்புக் கோரப்படாவிட்டால் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில இந்த கருத்தை வெளியிட்டார்.

போதைப்பொருளை மீட்பதற்காக மோசடியில் ஈடுபட்ட தமது இணைப்புச் செயலாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன பதிலளிக்காமல், பௌத்த குருமார் மீது குற்றம்சாட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர், தம்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விபரித்திருந்தார்.

சில காவியுடையணிந்த பிக்குகள் தம்மை போதைப்பொருள் கடத்துனராக வெளிக்காட்ட முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பௌத்த குருமார்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க தாம் பரிந்துரை செய்தமையே இந்த நிலைமைக்கு காரணம் என்று பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, நேற்று கம்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த பிரதமர், தமது இணைப்புச் செயலாளரும், புதல்வரும் சர்ச்சைக்குரிய கொள்கலனில் உள்ளிருக்கும் பொருள் என்னவென்ற அறியாத நிலையிலேயே கடிதம் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், ஓமல்பே சோபித்த தேரர் தொடர்பான பிரதமரின் கருத்து பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை விளக்குவதற்கான செய்தியாளர் சந்திப்பே இன்று இடம்பெற்றது.

இதன்போது, பிரதமர் தம்மீதான குற்றச்சாட்டுகளை கலைவதற்கான சில வினாக்களை உதய கம்மன்பில தொடுத்தார்.
எங்கள் மீது குற்றம்சுமத்துவதை விடுத்து பிரதமர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கைது செய்யப்பட்ட ஜமால் எனப்படும் பாக்கிஸ்தான் பிரஜைக்கு பிரதமர் தனிப்பட்ட இல்லம் ஒன்றில் வைத்து விருந்தளிக்கப்பட்டதா?

தமது புதல்வரின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஜமால் எனும் போதைப்பொருள் வர்த்தகரின் அனுசரணையுடன் விருப்பு எண் பொறிக்கப்பட்ட மேலாடைகள் தயாரிக்கப்பட்டதா?

போதைப் பொருள் மீட்கப்பட்ட கொள்கலன் விடுவிப்பதற்காக பிரதமரின் இணைப்புச் செயலாளர், முழு விபரம் அறிந்தா கடிதம் எழுதினார்?(sooriyan fm)

 

Web Design by Srilanka Muslims Web Team