(video) வாகன விபத்தில் செந்தில் தொண்டமான் குழுவினர் காயம் - Sri Lanka Muslim

(video) வாகன விபத்தில் செந்தில் தொண்டமான் குழுவினர் காயம்

Contributors
author image

Editorial Team

நன்றி நியூஸ் பெஸ்ட்

 
பண்டாரவளை நகரில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்துள்ளனர்.

 

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த குழுவினர் விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

 

செந்தில் தொண்டமானின் ஆதரவாளர்கள் சிலர் பயணித்த வாகனமொன்றே விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

இந்த விபத்தின் பின்னர் வாகனத்தின் சாரதி தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிடுகின்றார்.

 

Web Design by Srilanka Muslims Web Team