ACMC செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

ACMC செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக ஊடக அறிக்கை

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.

 

கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் சம அளவாக காணப்படும் ஒரு மாகாணமாகும். அந்த வகையில் கிழக்குக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக கொள்கையளவில், நிராகரிக்க முடியாது. ஆனால் இன்று நாடு இருக்கின்ற சூழ்நிலையில் குறிப்பாக கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எழுப்பப்பட்ட இனவாத கோசம் மறுபுறத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கான காரணம் வட கிழக்கு மக்களின் வாக்குகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்தமை உறுதியாக ஏற்றுக்கொன்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச. அதனை அவர் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக வாக்களித்துள்ளனர் ஆனால் சிறுபாண்மைச் சமுகம் குறிப்பாக முஸ்லீம்களினதும் வாக்குகள் கார்ணமாகவே நான் தோல்வியடைந்து விட்டேன், என்ற ஒருவித அதியிருப்தி உணர்வு பெரும்பாண்மையான சிங்கள மக்கள் மத்தியில் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

 

அதே நேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ.ல.மு.கா உதபியுடன் வட கிழக்கையும் இணைத்து சுயாட்சிக்கான நடவடிக்கை திட்டத்தை செயற்படுத்த முனைகின்றது.

 

இது தொடர்பாக சம்பந்தனும் ரவுப் ஹக்கீமும் மைத்திரியுடன் இரகசிய உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டு இருக்கின்றனர். என்ற ஒரு பிரச்சாரத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது மஹிந்த மற்றும் விமல் வீரவன்ச உட்பட மகிந்த அணியினர் கடுமையாக பிரச்சாரங்களை செய்து வந்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மையித்திரிபால சிறிசேனாவுக்கு தாம் ஆதரவு அளிக்கின்ற முடிபினை பகிரங்கப்படுத்தி தாமதித்த காரணமும் இவ்வாறன மகிந்த அணியினரின் பிரச்சாரமாகும்.
மறுபுரத்தில் முஸ்லீம்களுக்காக கரையோர மாவட்டம் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரபினால் முன்வைக்கப்பட்டபோதிலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கத்தில் தாம் பலமிக்க அமைச்சராக இருந்தும் அதனை செயட்படுத்துவதற்கு இரண்டில் 3 பெரும்பாண்மை பாராளுமன்ற அனுமதி தேவையாக இருந்தது. என்ற யதார்த்தினையும் மட்டுமல்லாமல் கரையோர மாவட்டம் தொடர்பாக மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்றப் ஊடகங்கள் வாயிலாக எதுவித கோரிக்கைகளை முன்வைத்ததன் காரணம் அது பெரும்பாண்மை சமுகத்தை பொருத்த வரையில் உணர்வுபூர்வமாகப் பார்க்க கூடியதொன்பதால் உரிய சர்ந்தர்ப்பம் வரும்பொழுது அமைதியாக செய்து முடிக்க வேண்டும் என்றிருந்தார்.

 

கிழக்கு முதலமைச்சர் பதவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முன்னைய அரசினால் முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டபொழுது முதலமைச்சர் பதவியை பெறுவதில் நாட்டமில்லாத ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் மக்களுக்கே ஏதாவதொரு காரணத்தை செல்ல வேண்டும் என்பதற்காக
‘தமக்கு முதலமைச்சர் பதவி முக்கியமல்ல
கறையோர மாவட்டமே முக்கியம்’

 

என்றதொரு பிரச்சாரத்தினை ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்தது. முஸ்லீம்கள் ஏதோ தனிநாடு கேட்கின்றார்கள். என்று ஒரு பிரமையை பெரும்பாண்மைச் சமுகத்தின் மத்தியில் விதைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தார்கள்.

 

இதன் விளைவாக ஜ.தே.கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கூட்டமைப்பு, ஜே.வி.பி, கெல உருமைய, போன்ற சகல கட்சிகளினதும் பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் பகிரங்கமாக எதிர்த்தாகள். இன்னும் கூறப்போனால் அவர்களது ஊடகங்களுக்கு ஊடான கரையோர மாவட்டக் கோரிக்கையின் விளைவு அதனை தர விரும்புகின்ற கட்சினையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.

 

போதக்குறைக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வியில் முஸ்லீம்களை நியாயப்படுத்துவதற்காகவோ, அல்லது ஜ.தே.கட்சி முன்வைத்த தமது அதீத கோரிக்கைளுக்கு ஜ.தே.கட்சி உடன்பட வைப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒரு உத்தியாகவோ தொடர்ச்சியாக கறையோர மாவட்டத்தை மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு என்று செய்து வந்த பிரச்சாரமும் பின்னர் மைத்திரியை ஆதரிக்க முஸ்லீம் காங்கிரஸ் முடிவெடுத்தன் பின்பு மகிந்த அணியினர் நாட்டில் ஒரு துண்டை வழங்க தனி பிரிவாக வழங்க முடியாது. என்று மறுத்தன் காரணத்தில்தான் முஸ்லீம் காங்கிரஸ் மறுபக்கம் சென்றது. என்ற பிரச்சாரமும் முஸ்லீம்களைப் பற்றியும் முஸ்லீம் காங்கிரஸ் பற்றிய தவறான கண்ணோட்டத்தை கணிசமான சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது .

 

இந் நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தயவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவி பெற்று ஆட்சியமைக்குமானால் வடக்கு கிழக்கு முஸ்லீம்கள் சேர்ந்து வடகிழக்கை இணைக்கப் போகின்றார்கள். என்ற பிரச்சாரத்தை தெற்கில் இனவாதிகள் செய்வதற்கு ஒரு வாய்ப்பிருக்கின்றது.
குறிப்பாக இரண்டு முதலமைச்சர்கள் சேர்ந்து இரண்டு மாகாணங்களையும் இனைப்பதற்கு சட்டரீதியான வழிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியொன்றை மீண்டும் ஆரம்;பித்து அரசியலில் இறங்க இருக்கின்றார். என்ற செய்திகள் அடிபடுகின்றன. அவ்வாறான சூழ்நிலையில் முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக அவரது இனவாத பிரச்சாரம் செய்வதற்கு இரு முதலமைச்சர்கள் பதவி ஒரு பெரிய வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துவிடும்.

 

முஸ்லீம் காங்கிரஸ் சாதாரண நிலையில் சாத்தியப்படாத கரையோர மாவட்டத்தை கேட்டு அது ஊடகங்கள் வாயிலாக பாரிய பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள் ;இந் நிலையில் முஸ்லீம்கள் தொடர்பாக தப்பாண அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முதலமைச்சர் பெறுவதற்கு துனைபோகி முஸ்லீம்களுக்கு இன்னும் அநியாயத்தை செய்ய வேண்டாம் என வேண்டுகின்றோம்.

 

முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் உதப முடியாது பரவாயில்லை. ஆனால் உபத்திரமாகவாது செய்யாமல் இருக்குமாறு வேண்டுகின்றோம். அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எக்காரணம் கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

இது யாரோ அவர்களிடம் போய் முதலமைச்சர் பதவி எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டதற்கு அவர்கள் கூறும் பதில் போல் இருக்கின்றது. முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே தனது கட்சிக்கு முதலமைச்சர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இன்று இருக்கின்ற அதே அங்கத்தவர்களுடன் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி தலைவராக மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபாலவே இருக்கின்றார். மாறாக தமிழ்த்தேசிய கூட்டமும் முதலமைச்சர் பதவி வேண்டுமென்றால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.

 

அதனை முஸ்லீம்களுக்கு விட்டுத் தரவேண்டிய அவசியமுமில்லை. அவர்கள் தமது சொந்த வழியில் அதனை பெறவாய்பியிருந்தாள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். மாறாக இன்றைய கால சூழ்நிலையில் முஸ்லீம் கட்சிகள் பகைடைக்காய்கலாக பாவித்து முஸ்லீம் சமுகத்தை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ள முயற்சிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 

அதே நேரம் முஸ்லீம்கள் எக்கேடு கெட்டால் என்ன? தனது ஆதங்கத்தை மட்டும் கருத்திற் கொண்டு நாங்கள் செயற்படுவோம். என்கின்ற மனோ நிலையில் இருந்து முஸ்லீம் கட்சிகள் விடுபட வேண்டும்.

 

வை.எல்.எஸ் ஹமீட்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Web Design by Srilanka Muslims Web Team