அகில தனஞ்சய ஹெற்றிக் சாதனை..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அகில தனஞ்சயதொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது, அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனது கன்னி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடி பெத்தும் நிஷங்க 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

Web Design by Srilanka Muslims Web Team