அக்கரைப்பற்று தவிசாளரே -மக்களின் அடிப்படைக் குறைபாடுகளைத் தீர்த்து வையுங்கள் - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று தவிசாளரே -மக்களின் அடிப்படைக் குறைபாடுகளைத் தீர்த்து வையுங்கள்

Contributors
author image

முகம்மட் இன்ஹாம்

 

இலுக்குச்சேனை பறக்கத்நகர் மக்களின் சுமார்43வருட குடிநீர்ப்பிரச்சினை சம்பந்தமாக என்னால் நீர்வழங்கல் அமைச்சருக்கு விடப்பட்ட கோரிக்கைக்கு எதிராக அக்ரைப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் றாசீக் அவர்கள் ‘நானுமொரு பரிசாரி எண்டு நடக்காராம் மிருவாடியில’ எனும் எமது கிராமத்துப் பழமொழிக்கமைவாக தன்னை மக்கள் நலன் விரும்பியாக அடையாளப்படுத்த முயற்சித்து சிறு பிள்ளைத்தனமாக தமது பதிலறிக்கையினை எழுதி இருந்தாலும் உண்மையில் அவர் ஒரு வகையில் குழந்தை உள்ளம் கொண்ட நல்லவர் என்பதை என்னால் மறுக்க முடியாது.

 
புதிதாக உருவாக்கப்பட்ட ஹிலுறு நகர் கிராமத்தில் நீர் இணைப்புக்கொடுத்தால் நமக்கும் பங்கு வரும் அங்கு சும்மா கிடைத்த வளவுகளுக்குத் தண்ணீர் வசதி இருந்தால் பெறுமதியான விலைக்கு விற்கலாம் எனும் யோசினை சில நேரம் சேமனுக்கு வந்திருக்கலாம்?

 

இந்த யோசினையில்தான் சுமார் 43வருடங்கள் பழமைவாய்ந்த இலுக்குச்சேனை பறக்கத்நகர் கிராமத்தை விட்டுவிட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஹிலுறுநகர் கிரமாத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து நீர் கொடுக்கப்பட்டிருப்பதாக சேமன் அறிக்கைவிட்டாலும் அவருக்கும் அந்த நீர் வழங்கல் திட்டத்திற்கும் எந்தவிதமான அடிப்படைச் சம்பந்தமுமில்லை, யாரோ மேற்கொண்டு வந்த முயற்சிக்குப்பின்னால் இவர் குடைபிடித்து வந்துள்ளார் என்பது தான் உண்மை.

 

 

எப்படியோ எமது பிரதேசசபை நிர்வாகத்திற்குட்பட்ட ஹிலுறு நகர் கிராமத்திற்கு நீர்கிடைத்ததில் எமக்குச் சந்தோஷம். அது அவ்வாறிருக்கநீர் வழங்க பணம் கட்டியபின் தான் மடுவு தோண்டுவார்கள் மடுவு தோண்டியதும் நீர் இணைப்புசபை ஊழியர்கள் அதிகநாட்கள் பிந்தாமல் உடனே கணக்சன் கொடுத்துவிடுவார்கள்.

 

இப்படியிருக்கும் போது தவிசாளர் றாசீக்  அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள பள்ளிக்கடிதத்தின் படி 1வருடத்திற்கு முன் தோண்டிய மடுவுக்கு இன்னும் அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கணக்சன் கொடுக்காமல் இழுத்தடிப்புச் செய்திருப்பதற்கான காரணம் என்ன?

 

மடுவு தோண்ட அனுமதி வழங்குவது சேமனுடைய கடமை அதற்கு பாராட்டுக்கடிதம் தேவையில்லை நின்றால் பாராட்டு நிமிர்ந்தால் தாலாட்டு கல்லுக்கொரு திறப்புவிழா என்று மக்களை ஏமாற்றிய காலம் முடிந்து விட்டதென்று உங்களுக்கு இன்னுமா விளங்கவில்லை?…………..இப்போதெல்லாம் நம் கிராமியமக்கள் தெளிவாக இருக்கிறார்கள் யார் வாயளவில் பெருமை பேசுவார் யார் காரியம் முடிப்பார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.

 

தண்ணீர் இணைப்பிற்க்கென பள்ளி வாயல் நலன்புரி அமைப்பினால் காசு கட்டுப்பட்டுள்ளது என்பதைச் சொல்ல எமக்கு ஆள்தேவையில்லை கணக்சசனைக் கொண்டுவரவே நமக்கு ஆள்தேவை
எனவே தயவு செய்து இவ்வாறான முன்னுக்குப்பின் முறணான ஊதாரி அறிக்கைகள் விடுவதை தவிர்த்துவிட்டு இலுக்குச்சேனை பறக்கத்நகர் மக்களுக்கு குடிநீர்வழங்க ஏற்பாடுகளைச் செய்து முடியுங்கள் என அன்பாய் வேண்டுகிறேன்.

 

உங்களது ஆட்சிக்காலத்தில் நமது ஊருக்குள் ஏற்படுத்தப்பட்ட முக்கிய அபிவிருத்திகளின் பின்னடைவுகள் தொடர்பான ஒரு நீண்டபட்டியலே எம்மிடம் இருக்கிறது சந்தர்ப்பம் வரும்போது அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தெரிவிப்போம்.

 

இருக்கின்ற காலத்திற்குள்ளாவது பொறுப்புமிக்க தவிசாளராக செயற்பட்டு நம்மை நம்பி உள்ள மக்களின் அடிப்படைக் குறைபாடுகளைத் தீர்த்துவைப்பது பற்றி யோசியுங்கள்
கிராமத்து மக்களின் நலன்கள் பற்றிய அபிவிருத்தி ஞானம் எனக்குள் பிறந்த போது நீங்கள் பொது நலன் என்ற புத்தகத்தின் அட்டையைக்கூட படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

 

அதனால் தான் சொல்கிறேன் சமூக உணர்வென்பது படித்துப் பாடமாக்குகின்ற விடயமல்ல அது பண்பிலும் புரிந்துணர்விலும் உருவாகின்ற தியாக உணர்வேயாகும்.
அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்………………………. அல்ஹம்துலில்லாஹ்………….

 
நன்றி
எச்ஜேஎம் இன்ஹாம்
எதிர்கட்சித் தலைவர்
பிரதேச சபை அக்கரைப்பற்று.

Web Design by Srilanka Muslims Web Team