அக்குரணை: குடும்பஸ்தர் றியாத் வாகன விபத்தில் வபாத் - Sri Lanka Muslim

அக்குரணை: குடும்பஸ்தர் றியாத் வாகன விபத்தில் வபாத்

Contributors

-அஸ்லம் அலி –

சவூதி அரேபியா றியாஹ் நகரில் ஒரு ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிய மொஹமத் சாகீர் என்ற இலங்கை அக்குரணையை சேர்ந்த குடும்பஸ்தர் வாகனம் ஒன்றினால் மோதப் பட்டு வபாத்தாகியுள்ளார் . இவர் தனது கடமையை முடித்துவிட்டு

வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு வபாதாகியுள்ளார்.

இவரை மேதிய வாகனம் இவரை மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளது, வாகத்தை பொலிசார் தேடிவருகின்றனர் தேடிவருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 38 வயதான இவர் 13 ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி சென்றுள்ளதுடன். றியாத்  பைசலியாஹ் என்ற    ஹோட்டலில் இரவு நேர கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று மற்றும் இரண்டு வயது  இரு குழந்தைகளுடன் றியாத் நகரில் வசித்து வந்துள்ளார் .

இவரின் ஜனாஸா நேற்று றியாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது . அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் நாடு திரும்பியுள்ளனர் .

Web Design by Srilanka Muslims Web Team