அசாராம் பாபுவின் மகனுக்கு செக் வைத்த நீதிமன்றம் - Sri Lanka Muslim

அசாராம் பாபுவின் மகனுக்கு செக் வைத்த நீதிமன்றம்

Contributors

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் அசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி சமீபத்தில் அசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறினார். அதன்பேரில், ஆசாராம் பாபுவை ஜோத்பூர் பொலிசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள அசாராம் பாபுவின் ஆசிரமத்தில் வசித்து வரும் ஒரு இளம்பெண், ஆசாராம் பாபு மீது கற்பழிப்பு புகார் தெரிவித்தார்.

கடந்த 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை ஆசாராம் பாபு தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில் அசாராம் பாபு மீது சூரத் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் அப்பெண்ணின் தங்கை அசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் நாராயண் சாய் மீதும் சூரத் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதற்காக தேடி வந்தனர்.

இதற்கிடையில் முன்ஜாமீன் கோரி சூரத் நீதிமன்றத்தில் நாராயண் சாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 6ம் திகதியிலிருந்து நாராயண் சாய் மற்றும் அவரது நண்பர்கள் பொலிஸ் கண்ணில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் நாராயண் சாய் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சூரத் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team