அச்சத்தால் மஹிந்த அரசு வழங்கியது விடுமுறை! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

அச்சத்தால் மஹிந்த அரசு வழங்கியது விடுமுறை! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு

Contributors

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் அமர்வுகள் நடக்கும்போது மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுப்பதற்காகவே நாட்டின் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் 8 நாள்கள் விடுமுறையை மஹிந்த அரசு வழங்கியுள்ளது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக மாணவர்கள் மீது பிரயோகிக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்புகளை காட்டுவார்களாயின் அரசு மூடி மறைக்க முற்படும் பல விடயங்கள் அம்பலமாகி விடும்.

இதற்குப் பயந்தே இந்த விடுமுறையை அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வேண்டுகோளை அடுத்தே சகல பல்கலைக்கழகங்களுக்கும் நாளை சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாள்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமது விரிவுரைகளுக்கு வருவதில் ஏற்படக்கூடிய போக்குவரத்து சிரமம், பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் என்பவற்றில் மாணவர்களின் பங்களிப்பு என்பவை காரணமாக மாணவர்கள் விடுமுறை கேட்டதன் காரணமாகவே இவ்வாறு தீர்மானிக்கபட்டது எனவும் அவர் கூறினார்.

இந்த விடுமுறை காலத்தில் விடுதிகளை புனரமைப்பதற்கு வசதியாக மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team