அடக்கம் செய்ய அனுமதிகோரி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்ட ஜனாஷாக்களுக்கு இழப்பீடுகளை வழங்குக..! » Sri Lanka Muslim

அடக்கம் செய்ய அனுமதிகோரி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்ட ஜனாஷாக்களுக்கு இழப்பீடுகளை வழங்குக..!

Contributors

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக் கோரி, அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சர்வதேச அழுத்தங்களாலேயே கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியல்ரீதியாக தோற்கடிக்க சர்வதேச ரீதியில் சதி செய்யப்படுவதாகவும், அதனைத் தோற்கடிக்க தொடர்ந்து போராடுவோமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team