அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்- மாநாடு நடைபெறும் காலத்தில் விசேட விடுமுறைகள் இல்லை: அரசாங்கம் - Sri Lanka Muslim

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்- மாநாடு நடைபெறும் காலத்தில் விசேட விடுமுறைகள் இல்லை: அரசாங்கம்

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனை உறுதி செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாகும் எனவே பிரபலமான இளைய முகங்களை தேர்தலில் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

அரசாங்கத்துடன் நேசம் பாராட்டும் தமிழ் முஸ்லிம் கட்சிகளிடம் தனித்து போட்டியிடுமாறு கோரவுள்ளேன்.

வட மாகாணத்திற்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயமொன்று அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரதேச சபைகள் மாகாணசபைகளில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு நடைபெறும் காலத்தில் விசேட விடுமுறைகள் இல்லை: அரசாங்கம்

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறும் காலத்தில் விசேட விடுமுறைகள் கியைடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விசேட பொது விடுமுறைகளை அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளது.

மக்களுக்கு விசேட விடுமுறைகளை வழங்கி மாநாட்டை நடாத்துவதில் அர்த்தமில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மாநாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற அரசாங்க உயர்மட்டக் கூட்டமொன்றின் போது பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு குறித்து விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.lw

Web Design by Srilanka Muslims Web Team