அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் 'தகழி' சஞ்சிகை வெளியீட்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் ‘தகழி’ சஞ்சிகை வெளியீட்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்

Contributors

 

(எம்.ஏ.றமீஸ்)

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தகழி’ சஞ்சிகை வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று(05) வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ் மொழிக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ் மொழிக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சவுறுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்வித்துறை சார்ந்த பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அசிரியர் எம்.ஏ.நியாஸ் நூல் விமர்சனத்தினை மேற்கொண்டார். மாணவர்களின் பல்வேறுபட்ட பெறுமதி மிக்க ஆக்கங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இச்சஞ்சிகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிதிகள் மூலம் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்நிகழ்வல் கலந்து கொண்டு உரையாற்றிய உதவிக்கல்விப் பணிப்பாளர் குறிப்பிடுகையில்,

எழுத்துத் துறையும் வாசிப்புத் துறையும் இள வயதினரை விட்டு தூர விலகிக் கொண்டு செல்லும் இக்காலப் பகுதியில் முழுக்க முழுக்க மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்ற இச் சஞ்சிகை வெளியீடானது நிச்சயம் காலத்தின் தேவையாகவுள்ளது. பாடசாலைகளில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களும் ஏனைய மாணவர்களும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் அதிகம் அக்கறை காட்ட வேண்டும். இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டும் மாணவர்கள் பிற்காலத்தில் ஏதோ ஓர் துறையில் பிரகாசித்து மிளிர்வர்.

மாகாணக் கல்வித்திணைக்களங்கள் மூலம் மாணவர்களின் எழுத்துத் துறையினை விருத்தியடையச் செய்யும் பொருட்டு சஞ்சிகை உருவாக்கத்திற்கென தனியான நிதியொதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலைகளிலும் பகுதி ரீதியாக சஞ்சிகைகள் வெளியிடப்படவேண்டும் அப்போதுதான் அனைத்து வயதினரையும் எழுத்துத் துறைக்குள் உள்வாங்க முடியும்.

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயம் கல்வித்துறையில் பல்வேறுபட்ட சாதனைகளை நிகழ்த்தி வரும் பாடசாலைகளுள் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மாகாண மட்டத்தில் சாதனை நிலைநாட்டிய பாடசாலையாகும். இப்பாடசாலையின் வெளியீடுகள் மேலும் சிறப்பாக அமைய என்றும் எனது பிரார்த்தனைகள் எனக் கூறினார்.

 

 இந்நிகழ்வின் போது பாடசாலைகளில் நடைபெற்ற பரீட்சைகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் திறமை காட்டியோருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team