அட்டாளைச்சேனை பட்ஜெட் நிறைவேற்றம்! - Sri Lanka Muslim
Contributors

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் (பட்ஜெட்) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 56ஆவது அமர்வு,  தவிசாளருர் ஏ.எல் அமானுல்லா தலைமையில், சபா மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றது.

இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரால்  2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய 4  கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 18 உறுப்பினர்களை கொண்ட சபையின் 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், வரவு – செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team