அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் இங்கு அரசியல் செய்ய வரக் கூடாது - தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் (படங்கள்) - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் இங்கு அரசியல் செய்ய வரக் கூடாது – தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் (படங்கள்)

Contributors

 

எம்.பைஷல் இஸ்மாயில்-

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் இங்கு அரசியல் செய்யவரக் கூடாது அது மாத்திரமல்லாமல் அமைச்சர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் முறையற்ற விதத்தில் சட்டத்துக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான முறையிலும் செயற்படக்கூடாது என்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சம்புக்களப்பு வடிச்சல் மற்றும் கோணாவத்தை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை அட்டளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே தவிசாளர்  மேற்கண்டாவறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றியபோது கூறுகையில்,

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வேலைதிட்டமும் பிரதேச சபையின் அங்கீகாரத்தையோ கருத்தையோ பெற்றிருக்கவில்லை. கோணாவத்தை அபிவிருத்திக்கு முன்னர் கோணாவத்தை ஆற்றுக்கான உண்மையான எல்லைகளை நீர்ப்பாசன திணைக்களம் அடையாளம் இட்டிருக்க வேண்டும்.

மேலும் அவர்களுக்கான அறிவித்தல்களை கடிதம் மூலம் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் மேற்கொள்ளாது அடாவடித்தனமாக மக்களின் காணிகளையும் வாழ்வாதாரமாக அமைந்த தென்னை மரங்களையும் அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையினை கண்டிக்கின்றேன்.

இவ்வாறான தவறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது அதிகாரிகளும் அவற்றிற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.  ஜெய்க்கா திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வீதிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. மழை காலங்களில் வீதிகளில் நீர் தேங்கி நிற்கின்றது. பல வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இதேவேளை அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாஉல்லாவினால் திட்டமிட்ட முறையில் மிகவும் நுட்பமாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலும் கட்டடங்களும், வீதிகளும், வடிகாண்களும் அமைத்து வருகின்றமையினை இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

ஆளும் கட்சியின் பங்காளி கட்சியாக மு.கா. கட்சி இருந்த போதிலும் எமது கருத்துக்கள், ஆலோசனைகள் அதிகாரிகள் மற்றும் வேறு தரப்பினர் மத்தியில் கண்டுகொள்வதில்லை. இதற்கான காரணம் சிறுபான்மை இனக் கட்சி என்பதாலும், சமூகத்திற்கு குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக மு.கா. கட்சி இருப்பதனாலுமே ஆகும்.

இதவேளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா அமைச்சர் உதுமாலெப்பையின் பித்தியோக செயலாளராக செயற்பட்டு வருகின்றார். இவர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளராக இங்கு மக்களுக்கு கடமை புரிவதாக இவரின் நடவடிக்கைகள் காணப்படவில்லை. மாறாக அமைச்சர் உதுமாலெப்பைக்கும், அமைச்சர் அதாஉல்லாவுக்குமான செயலாளராகவே கடமையாற்றுகின்ற விடயம் ஒரு வருத்தத்தையளிக்கின்றது.

ஒரு அரசின் உயரதிகாரி சமூகத்துக்கும், தான் கடமையாற்றும் பிரதேசத்துக்கும் ஒரு நடு நிலையாக செயற்படவேண்டும். இது அவ்வாறில்லாமல் தேசிய காங்கிரஸின் கட்சிப் போராழியாகவும் இரு அமைச்சர்களின் பிரத்தியோக செயலாளராகவும் அரசியல் பார்த்து செயற்பட்ட வருகின்றார்.

பொதுவாக சில அரசியல் வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் இரட்டை வேடம் புரிந்து தங்களின் செயலை செய்வார்கள் ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஹனிபாகிய நீங்கள் மூன்று வேடம் புரிந்து செயற்பட்டு வருவது உங்களின் செயலை பெரிதும் பாராட்டுகின்றேன் என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அவரினை செயலை பாராட்டியுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஹனிபாவே தனது செயலை பாராட்டியும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தவிசாளர் அன்ஸில் கூறினார்.

எனவே அரச கடமை புரியும் உயரதிகாரிகள் அரசியல் செய்ய வரக் கூடாது அப்படி அரசியல் செய்தாலும் அது மறைமுகமாகவே காணப்படவேண்டும். இங்கு அவ்வாறில்லாமல் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஹனிபா என்பவர் அரசியல் செய்து வருவது மட்டுமல்லாமல் தனது மூன்று வேடம் பற்றி அரின் செயலை அவராகவே தன்னைப் பற்றி தானே புகழ்ந்து பேசும் ஒரு அர உயரதிகாரி என்றால் நாட்டில் ஹனிபா செயலாளராகத்தான் இருக்கும்.

அரச கடமையாற்றும் சக உயரதிகாரிகள் இதை என்னி மனம் வருந்த வேண்டும். அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச மக்களும் வெட்கப்பட வேண்டும்.

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team