அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வீதியின் அவலநிலை யார் கண்ணிலும் தென்படாதது ஏன்? - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வீதியின் அவலநிலை யார் கண்ணிலும் தென்படாதது ஏன்?

Contributors

அட்டாளைச்சேனை 9ஆம் பிரிவு புறத்தோட்டம் மத்திய வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பாதையின் ஒரு சிறு பகுதி கொங்றீட் இடப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பகுதி கொங்றீட் போடப்படாமல் காணப்படுகின்றது.

மழை காலங்களில் இந்தப் பாதை வெள்ளக்காடாக் காட்சியளிப்பதோடு மக்கள் பிரயாணம் செய்வதில் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்தப் பாதையின் ஒரு பகுதி கொங்றிட் இடப்படுகின்றபோது பாதையின் முழுவதையும் குறிப்பிட்ட அளவுக்கு தோண்டப்பட்டே வேலைகள் நடைபெற்றிருக்கின்றது. பொதுமக்கள் ஏன்? எல்லாற்றையும் தோண்டுகின்றீர்கள் என கேட்டபோது, இன்னும் இரண்டு மாதங்களில் எல்லாவற்றையும் போடுவோம் என்று கூறிவிட்டே பாதையின் ஒரு பகுதியை கொங்றீட் மூலம் புனரமைத்துள்ளனர்.

இரண்டு மாதங்களி்ல முழு பாதையையும் போடுவோம் என்று கூறியவர்கள் தற்போது நான்கு வருடங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மழைக்காலங்களில் இந்தப் பாதையில் தேங்கி நிற்கின்ற வெள்ள நீர் வடிந்து வற்றுதற்கும் பாதை சிராகுவதற்கும் சுமார் ஆறு மாதங்கள் எடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் சிபார்சில் போடப்பட்ட இப்பாதையின் நிலையினை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பல தடவைகள் எடுத்துக் கூறியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

அட்டாளைச்சேனை பெரும் பகுதியான பாதைகள் அமைச்சர் உதுமாலெப்பையின் அமைச்சின் மூலம் கொங்றீட் போடப்பட்டுள்ள நிலையில் புறத்தோட்டம் மத்திய வீதியை இதுவரை அமைச்சர் உதுமாலெப்பை கண்டுகொள்ளாதது மிகக்கவலைக்குரிய விடயமாகும்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தராக இருக்கும் மூத்த கவிஞர் கலாபுசணம் ஆசுகவி அன்புடீனின் வீடும் இந்தப் பாதையில்தான் இருக்கின்றது.

அமைச்சர் உதுமலெப்பைதான் இப்படி என்றால் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இந்தப் பாதையை கண்டுகொள்ளாமல் இருப்பது அதைவிடக் கவலையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நெல்சிப் என்றும், கமநெகும என்றும் டிசிபி என்றும் வரும் நிதிகள் மூலம் அபிவிருத்திகளை செய்துவரும் பிரதேச சபை புறத்தோட்டம் மத்திய வீதியை புனரமைப்பதற்கு முன்வருவருவார்களா?

(அத தெரண – தமிழ்)

Web Design by Srilanka Muslims Web Team