எனக்கு பதவியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கும் சக்தி கிடையாது - தவம் (video) - Sri Lanka Muslim

எனக்கு பதவியிடுவதற்கு ரவூப் ஹக்கீமுக்கும் சக்தி கிடையாது – தவம் (video)

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ  

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா தனக்கு அரசியக் கற்று தரவுமில்லை, அதே போன்று நான் அவருடைய அரசியல் பாசறையில் வளரவுமில்லை என்ற அரசியல் ரீதியான கருத்தினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் நேர் காணலின் பொழுது தெரிவித்தார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம்.. 2004ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசில் இருந்து அமைச்சர் அதாவுல்லா வெளியேறிய சூழ் நிலையில் பேரியல் அஸ்ரஃப் மற்றும் ஹரிஸ் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது. அந்த வெற்றிலை சின்னத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் போட்டியிட்ட நிலையில் நீங்கள் பேரியல் அஸ்ரஃபிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அதாவுல்லாவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் சகோதரர் சேகு இஸ்ஸதீன் அக்கறைப்பற்றில் போடப்பட்ட ஒவ்வொரு மேடைகளிலும் பகிரங்கமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்.

இவ்வாறு ஒரே சின்னத்தில் எல்லோரும் போட்டியிடுகின்ற பொழுது எங்கள் ஊரை சேர்ந்த அதாவுல்லாவிற்கு வாக்களிக்க வேண்டாம் என சகோதரர் சேகு இஸ்ஸதீன் பிரசாரத்தினை மேற் கொண்டமை எங்களுக்கு நியாயமற்ற விடயமாக தென்பட்டது. அந்த சூழ் நிலையில் தன்னுடைய வெற்றிக்கு வேலை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தன்னிடம் வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் அக்கறைப்பற்றில் 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் திகதி அவரினால் போடப்பட்டிருந்த இறுதி பிரச்சார மேடையில் முதன் முறையாக அதாவுல்லாவுடன் கைகோர்த்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலான உரையினை நிகழ்த்தி அவருடைய வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளேன்.

மாறாக அவர் மூலமாக நான் அரசியலுக்குள் வரவில்லை. என்னுடைய அரசியல் பிரவேசம் முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற தேசிய இயக்கம் எப்பொழுது உருவானதோ அன்று நாங்கள் அரசியல் கள செயற்பாட்டுக்கு வந்து விட்டோம். அதற்கு பிற்பாடும், சகோதரர் சேகு இஸ்ஸதீனுடைய பிரிவிற்கு பிற்பாடும் அரசியல் கள செயற்பாட்டில் மிக தீவிரமாக ஈடுபட்டோமே தவிர.! முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் முகாமில் எந்த கட்டத்திலும் நாங்கள் இருந்ததில்லை. எனக்கென்று இருந்த தனியான செல்வாக்கின் ஊடக தான் பெற்ற தெரிவு வாக்குகள் அதிகமாக இருந்த காரணத்தினால் அவருடைய கட்சி வெற்றியடைந்திருந்தது. கட்சிக்கு கிடைத்த வெற்றியில் அதிகமான தெரிவு வாக்குகளை தான் பெற்றதன் காரணமாகவே எனக்கு அக்கறைபற்று பிரதேச சபைக்கான தவிசாளர் பதவி தரப்பட்டது.

மாறாக எனக்கு அரசியல் முகவரி கிடைத்தமைக்கும் அதாவுல்லாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏன் என்றால் அவருடன் இணைவதற்கு முற்பாடு முஸ்லிம் காங்கிரசில் இருந்திருக்கின்றேன். அதே போன்று சகோதரர் சேகு இஸ்ஸதீனோடு இருந்திருக்கின்றேன். எல்லாவற்றிக்கும் மேலாக ஒலுவில் பிரகடணத்தின் ஊடாக முழு சமூகத்திற்கும் எனது முகத்தினை காட்டிய விடயங்கள் எல்லம் இருக்கின்ற பொழுது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனக்கு அரசியல் முகவரி தந்தார் என்ற கருத்தினை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நீண்ட பதிலானது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மூலமாகத்தான் தவத்திற்கு அரசியல் முகவரி கிடைத்தது என பேசப்படுகின்ற விடயம் உண்மையா என்ற கேள்விக்கே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.?

அத்தோடு மேலும் ஏ.எல்.தவத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளான
01- எதற்காக உங்களுடைய பிரதேசத்து மக்கள் உங்களை செல்லமாக தவம் என அழைக்கின்றார்கள்.?

02- உங்களுடைய அரசியல் அறிமுகத்தின் முதல் படி 2002ம் ஆண்டு தென் கிழக்கு கிழக்கு பல்கலை கழகத்தில் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கான தனித்தேசியத்தினை வழியுறுத்தி இடம் பெற்ற ஒலுவில் பிரகடணம் என பேசப்படுகின்றது. குறித்த நிகழ்விற்கு தாங்கள் தலைமை தாங்கி நடாத்தியவர் என்ற வகையில் நீங்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள்.?
03- முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால்தான் தங்களுக்கு அரசியல் அறிமுகம் தரப்பட்டதாக கூறப்படுகின்றதே.?

04- அக்கறைபற்று மாநகர சபைக்கான மேயர் பதவியானது தங்களுக்கு வழங்கப்படாமையே அதாவுல்லாவிற்கும், உங்களுக்கும் இடையிலான அரசியல் பிரிவிற்கு காரணம் என கூறப்படுகின்றே.?

05- அக்கறைப்பற்றில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம் நோன்பு திறப்பதற்காக ஆதரவாளர்களுடன் சமூகமளித்த வேலையில் நீங்கள் நோன்பு திறப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஞ்சிப்பானைக்குள் மண்ணினை அள்ளி வீசி ரவூப் ஹக்கீமையும் ஆதரவாளர்களையும் விரட்டி அடித்ததாக உங்கள் மீது பரவலாக குற்றம் சுமத்தபடுகின்றதே.?

06- அதே போன்று பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் வபாத்தாகிய தினத்தன்று நீங்கள் அக்கறைப்பற்று பிரதேசம் எல்லாம் வெடில்களை கொழுத்தி சந்தோசமடைந்ததாக இன்னுமொரு பாரிய குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப்படுகின்றதே.?

07- கடந்த மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உங்களுக்கு பரவலாக விருப்பு வாக்குகள் அளிக்கப்படிருந்தன. முக்கியமாக கூடுதலான விருப்பு வாக்குகளையும் நீங்கள்தான் பெற்றிருந்தீர்கள். அப்படி என்றால் உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் முஸ்லிம் காங்கிரசுடைய வாக்குகளா.? அல்லது உங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கியா.?

08- இவ்வாறு சிறீலக்கா முஸ்லிம் காங்கிரஸில் தேர்தலில் களமிறங்கிய உங்களுக்கு பரவலாக மாவட்டத்தில் அதிகளவாக விருப்புவாக்குகள் கிடைத்தமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

09- கருத்தியல் ரீதியாக தவம் பிரச்சரங்களை மேற்கொள்ள கூடியவர் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் உங்களை பரவலாக புகழ்ந்து பேசி வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.. அப்படி இருந்தும் இன்னும் ஏன் முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் உக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவில்லை.?

10- உங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படாமைக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தான் காரணம் என பேசப்படுவதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?
11- ஒலுவில் பிரகடணத்தையே நடாத்தி தேசியத்துக்கு உங்கள் முகத்தினை காட்டிய நீங்கள் சாந்தமருதிற்கான தனியான பிரதேச சபையினை பெற்றுக்கொடுக்கு விடயத்தினை முஸ்லிம் காங்கிரசின் முக்கிய புள்ளி என்ற அடிப்படையில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

12- உங்களுடைய பிரதேசத்தில் நீங்கள் முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்ற நுறைச்சோலை, மற்றும் வட்டமடு பிரச்சனைகளுக்கான தீர்வினை நோக்கி மிகவும் கடுமையாக பயணித்தவர் என்ற வகையில் அதற்கான தீர்வினை ஏன் இன்னும் உங்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.?

13- முஸ்லிம் காங்கிரசில் உள்ள முக்கிய புள்ளிகள் (முன்னாள் முதலமைச்சர் உட்பட) எல்லாம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குதிக்க போவதாக பேசப்படுகின்ற நிலையில் நீங்களும் அத்தேர்தலில் களமிறங்குவீர்களா.?

14- பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃபினுடைய விபத்து சம்பந்தமாக விசாரிக்கப்பட வேண்டும் என பசீர் சேகுதாவூத் போன்றவர்களால் கூறப்படுவதும், மறுபக்கத்தில் பாரியார் பேரியல் அஸ்ரஃப் 17 வருடம் மெளனம் காத்து விட்டு தற்பொழுது எதற்காக இவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என அறிக்கைகள் விடுவது சம்பந்தமாக உக்களுடைய கருத்து என்ன.?

15- முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி., தவிசாளர் பசீர் சேகுதாவூத் , அட்டாளச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் போன்றவர்கள் எல்லாம் உங்களுடைய தலைமைத்துவத்திற்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பினை உருவாக்கி கிழக்கிலே புதியதோர் அரசியலினை மேற்கொள்ள போவதாக செய்து வருகின்ற பிரச்சரத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

16- கடைசியாக உங்களுடைய கட்சியின் தலைவர் அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமிற்கும் உங்களுக்கும் இடையிலான உறவானது நிகழ் காலத்தில் எவ்வாறு காணப்படுகின்றது.?

போன்ற முக்கிய பதினாறு கேள்விகளுக்கு முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தினால் வழங்கப்பட்ட விரிவான பதில்களுடைய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team