அதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கலாம் - Sri Lanka Muslim

அதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கலாம்

Contributors
author image

Editorial Team

தெற்கு அதிவேக வீதியில் நாளை (01) காலை 6.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் இலவசமாக வாகனங்கள் பயணிக்க முடியும்.

நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறித்த காலப்பகுதியில் அந்த வீதி வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என்று வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாளை மே தினத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளைய தினம் அதிக வாகனங்கள் இந்த வீதியால் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வழமையான வெளியேறும் கதவுகளுக்கு மேலதிகமான கதவுகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன நெரிசலை கட்டுப்டுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகளை சரியாக பின்பற்றுமாறு சாரதிகளிடம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ். ஓப்பநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார். (ad)

Web Design by Srilanka Muslims Web Team